

“விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்.”
இந்த வரிகள் கல்கி எழுதியது. 1946இல் விந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘முல்லைக் கொடியாள்’ நூலுக்கு கல்கி எழுதிய முன்னுரை. “அபிப்பிராயத்தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டு விடுகின்றது.” 1953இல் வெளிவந்த ‘சமுதாய விரோதி’ என்னும் விந்தனின் சிறுகதைத் தொகுதிக்கு எழுத்தாளர் கி.சந்திரசேகரன் எழுதியுள்ள அறிமுகம் மேலே கண்ட சொற்கள்.