

ஏகாதிபத்தியம் நீடித்திருக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவரைவியல் ஆராய்ச்சி ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களில் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் உள்ள தொல்குடிகளை அறிவதற்கான ஆதாரங்கள். மலைவாழ் பழங்குடிகள் தொடர்பான ஜேம்ஸின் ஆராய்ச்சி ஆவணங்களை அவருடைய மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி தொகுத்து 1873இல் வெளியிட்டார்.
ஷெர்ரிங்கின், ‘இந்துப் பழங்குடிகளும் ஜாதிகளும்’ மூன்று தொகுதிகளாக 1881இல் வெளியானது. எம்மாவின் ‘தெலுங்கு பறையா பழங்குடி’ 1899ஆம் ஆண்டிலும், காவல் அதிகாரியான பாப்பாராவின் ‘குற்றப் பழங்குடி’ 1905ஆம் ஆண்டிலும் அக்கால ஆய்வு இதழ்களில் வெளியாகின.