

சாதி குறித்தும் சாதிக் கட்டமைப்பைப் பற்றியும் எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள், கள ஆய்வுகள் எழுதப்பட்டுவிட்டன. அவை சாதி அமைப்பின் வரலாறு, சாதி வன்முறையாளர்கள், பாதிக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பான எழுத்துகளாக மட்டுமே பெரும்பாலும் இருக்கின்றன.
ஆனால், இந்தக் கட்டமைப்பில் மூன்றாவது கோணமாக இருக்கும் - பெரிதும் கவனிக்கப்படாத, ஆராயப்படாத இன்னொரு கூட்டம் உண்டு: சுற்றி நிற்கும் எண்ணற்ற பார்வையாளர்கள்தான் அவர்கள். இவர்கள் வன்முறைச் சம்பவத்தைக் கண்கூடாகப் பார்க்கின்றவர்கள் மட்டுமல்ல; வன்முறை நிகழ்கின்ற சமூகத்தின் அங்கத்தினரும்கூட.