

தன் வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (33) இறக்கும்வரை சிறை தண்டனை விதித்து வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
2024இல் வெளிச்சத்துக்கு வந்த இந்த வழக்கில், ஒரு முன்னாள் எம்.பி.க்கு எதிராக விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, தன் வீட்டுப் பணிப்பெண் உள்பட ஏராளமான பெண்களோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காணொளிகள் 2024இல் வெளியாகின.