

தூய்மைப் பணியாளர்கள், ‘செக்யூரிட்டி’கள் என்றழைக்கப்படும் காவலர்கள், சுமை தூக்குபவர்கள் போன்றோர் பல்வேறு இடங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக இப்பணிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள்.
பொதுவாகவே, ஒப்பந்த அடிப்படையில் இந்த ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுவதால், இவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இல்லை. மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு நாள் முழுவதும் உழைக்கிறார்கள்.