

புலியை வேட்டையாடிக் கொன்றவர்கள் மட்டுமே கம்பீரமான புலி மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்றொரு கட்டுப்பாடு, குடகு ராஜ்ஜியத்தில் இருந்தது. இதனைக் குறித்துச் சிக்கவீர ராஜேந்திரன் என்ற தனது நாவலில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதியிருக்கிறார்.
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாஸ்தி ஹங்கேனஹள்ளியில் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மைசூர் மகாராஜாவின் காலத்தில் மாவட்ட ஆணையராகப் பணியாற்றிய இவர், கன்னடத்தில் கதைகள் எழுதத் துவங்கிப் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். ஞானபீடம் உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.