

உடல் உறுப்புகளைக் கொடையாகப் பெறுவதிலும் இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைகளை மேற்கொள்வதிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. ஆகஸ்ட் 3இல் தேசிய உடல் உறுப்பு மாற்றுதினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், மாநில உறுப்பு தான மாற்றுச் சிகிச்சை ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் வழங்கிய பேட்டி:
தமிழகத்தில் உறுப்புகள் கொடையாகப் பெறப்படுவது அதிகரித்துவருகிறதா? அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படுவது இதற்குக் காரணமா? - நிச்சயமாக! இதுவரை இல்லாத அளவுக்கு 2024இல் 268 பேரிடமிருந்து முக்கியமான உறுப்புகள், சிறிய உறுப்புகள், திசுக்கள், எலும்புகள் போன்றவை கொடையாகப் பெறப்பட்டன. இவை சுமார் 1,500 பேருக்கு அறுவைசிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டுள்ளன.