

பிரிட்டன் அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்க வில்லைதான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயதை 18இலிருந்து 16 ஆகக் குறைப்பது பற்றி அங்கு பரவலாக விவாதம் நடைபெற்றுவருகிறது. சொல்லப்போனால் ஸ்காட்லாண்ட், வேல்ஸ் போன்ற பகுதிகளில் ஏற்கெனவே சில வகைத் தேர்தல்களில் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது 16ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது.
பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி போன்றவை நெடுங்காலமாகவே வாக்களிக்கும் வயதை 16ஆகக் குறைக்க வேண்டும் என்று கூறிவருகின்றன. இதன்மூலம் இளம் பருவத்தினரின் ஆதரவு தங்களுக்குக் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம்.