

அண்மைக் காலத்தில் இந்திய அரசின் ஆண்டு வருமானம் ரூ.30 லட்சம் கோடியையும், செலவினம் ரூ.35 லட்சம் கோடியையும் கடந்துள்ளன. அதேபோல் தமிழக அரசின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் கோடியையும், செலவினம் ரூ.4 லட்சம் கோடியையும் கடந்துள்ளன. கூடிய விரைவில் இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அளவு ரூ.50 லட்சம் கோடியையும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் அளவு ரூ.5 லட்சம் கோடியையும் எட்டவுள்ளன.
மத்திய - மாநில அரசுகளின் வரவு செலவுகளும், உள்ளாட்சி அமைப்புகளின் வரவு செலவுகளும் கணக்கு காட்டும் பொறுப்புடைமை (public accountability) நடைமுறைக்கு உள்பட்டவை; மக்களின் ஆய்வுக்கு உள்பட்டவை.