

பசிப்பிணியை அகற்றி, வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் 2015இல் ஐக்கிய நாடுகள் அவையானது, ‘நிலைத்த வளர்ச்சி இலக்கு’களை உருவாக்கியது. இந்த நிலையை எட்ட மொத்தம் 17 நிலைத்த வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்து, அவற்றை 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்கிற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
இலக்குகளை எட்ட ஐந்து ஆண்டுகளே மீதமுள்ள நிலையில், உலகின் போக்குகள் அதற்கு எதிராகவே உள்ளன. இதையடுத்து, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.