

செயற்கை நுண்ணறிவின் வருகைக்குப் பின்னர் பலரிடமும் பரவலாக நிலவும் கேள்வி: ‘இந்தப் புதிய தொழில்நுட்பம் என் வேலையைப் பறித்துவிடுமா?’ என்பதுதான். இப்போது படித்துக்கொண்டிருக்கும் தங்கள் மகனுக்கு / மகளுக்குச் செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலைவாய்ப்பு மறுக்கப்படுமா என்னும் கேள்வி பல பெற்றோருக்கு இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு என்கிற தொழில்நுட்ப அம்சம் அறிமுகம் ஆன இந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கிலும் ஏறத்தாழ 12,00,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையும் செயற்கை நுண்ணறிவுச் செயலிதான் நமக்குச் சொல்கிறது.