

காஷ்மீரில் செனாப் ரயில் பாலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டபோது நாம் பெருமிதம் கொண்டோம். ஆனால், சமீபத்திய குஜராத் பால இடிமானம் நம்மை உறையவைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நம் நாட்டில் 16 பாலங்கள் இடிந்துள்ளன. சுமார் 200 உயிர்களை இழந்துள்ளோம். உலகளவில் இப்படிப்பட்ட விபத்துகளுக்கு நாம் தவறான முன்னுதாரணமாக இருக்கிறோம் என்பது வருத்தமளிக்கிறது.
பிற்போக்கான நடைமுறை: ஒரு தவறின் முடிவில் இன்னொரு தவறு செய்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். தவறுக்கான காரணங்களைத் தீர ஆராய்ந்து வெளிக்கொணர்வது இல்லை. அவற்றுக்கான காரணங்கள் வெளிப்பட்டால்தான், எதிர்காலத்தில் புதுத் தவறுகளைத் தவிர்க்க ஏதுவாகும்.