

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஜெயதேவா இதயநோய் சிறப்பு மருத்துவமனையில், கடந்த வாரம் திடீரென நூற்றுக்கணக்கானோர் குவிந்து, தங்களுக்கு இதயநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி மருத்துவர்களை வற்புறுத்திய செய்தி நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அங்கு மே, ஜூன் மாதங்களில் மட்டும் 24 பேர் இதயக் கோளாறால் உயிரிழந்ததன் அடிப்படையில், தங்களுக்கும் இதயநோய் இருக்குமோ என்னும் அச்சத்தில் மருத்துவமனையில் அவர்கள் குவிந்தனர்.