

‘குழந்தைகள் வசிப்பதற்கு உலகிலேயே மிக ஆபத்தான இடமாக காசா இருக்கிறது’ என்று அண்மையில் கூறியிருக்கிறது யுனிசெஃப் அமைப்பு. காசா பகுதியில் உள்ள குழந்தைகள் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
வெடிகுண்டு வீச்சுக்கள் ஏற்படுத்தும் அழிவுகள், நெருங்கிய உறவினர்கள் கண்ணெதிரே உயிரிழக்கும் அவலம் என மிகக் கொடுமையான அனுபவங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அவ்வப்போது வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.