சிறப்புக் கட்டுரைகள்
வீழ்ச்சியடையும் பயிர் விலை: மீட்சிக்குத் துணை நிற்பது யார்?
தர்பூசணி, மா, பருத்தி, பலா போன்ற பயிர்களைப் பயிரிட்ட தமிழக விவசாயிகளுக்கு 2025ஆம் ஆண்டு மிக மோசமானதாக அமைந்தது. இது ஏதோ விளைச்சல் குறைவாலோ, மழை வெள்ளப் பாதிப்பாலோ, பயிர்களில் பூச்சித் தாக்குதலாலோ நடக்கவில்லை.
அரசிடம் சரியான கொள்முதல் கொள்கைகள் இல்லாததுதான் காரணம். விவசாயிகள் பெரும் உழைப்பையும் மூலதனத்தையும் போட்டு விளைவித்த பயிர்களுக்குச் சந்தையில் உரிய விலை கிடைக்காமல் தவிக்கும் துயரம் பிப்ரவரியில் தொடங்கித் தற்போதுவரை நடக்கிறது.
