

தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் முன்னோடியாக இருக்கிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. மாணவர் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதம், அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்களில், தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்த அம்சங்கள்தான், தமிழக அரசு ஏன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது என்பதைக் காட்டுகின்றன.
அதேவேளையில், உயர் கல்வி - ஆராய்ச்சி துறையில், தமிழ்நாடு தனது முந்தைய தலைமைச் சூழலை இழந்துவிட்டது. பல்கலைக்கழகங்கள் சீரழிவில் உள்ளன, ஆராய்ச்சி தளர்ந்துவிட்டது, புதிய நிறுவனங்களுக்காக மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இத்தகைய சூழல் அவசியம் விவாதிக்கப்பட்டாக வேண்டும். காரணம், எதிர்காலம் இதை அடிப்படையாகக் கொண்டே உள்ளது.