

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை - இது நமது அரசியல் கட்சிகள் அடிக்கடி பயன்படுத்தும் வாசகம். இதை அப்படியே பன்னாட்டு அரசியலில் பொருத்திப் பார்க்க முடியாது. உலக அரங்கில் பகைவர்களும் நண்பர்களும் அவ்வப்போது மாறலாம்.
ஆனால், எல்லாக் காலங்களிலும் நண்பர்கள் இருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கும் (ஏப்ரல் 22, 2025), செந்தூர் நடவடிக்கைக்கும் (மே 7-8, 2025) உலக நாடுகள் பல்வேறு விதமாக எதிர்வினை ஆற்றின. அது ஒரு கேள்வியையும் எழுப்பியது. இப்போது இந்தியாவின் நண்பர்கள் யார் யார்?