

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த விவாதங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் நடைபெறுகின்றன. சாட்ஜிபிடி உள்ளிட்ட எந்த ஏஐ சேவையைப் பயன்படுத்துபவர்களும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு. செயற்கை நுண்ணறிவுச் சேவைகளின் உள்ளார்ந்த போதாமைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தச் சேவைகள் உலகம் முழுவதற்கும் பொதுவானவை அல்ல என்பதுதான் அது.
அதாவது, யாருக்கோ உருவாக்கப்பட்ட ஏஐ சேவைகளைப் பெரும்பாலானோர் எந்தக் கேள்வியும் கேட்காமல் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஏஐ அளிக்கும் வியப்பும், நம்ப முடியாத தன்மையும் நம் கண்களை மறைக்கின்றன என்றும் சொல்லலாம்.