

தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே கோயில்கள், ஆதீனங்களின் அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு என உபரி விவசாய நிலங்கள் எழுதி வைக்கப்பட்டன. இவற்றில் 60% விளைநிலங்கள் குத்தகை வாரப் பதிவுச் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குக் குத்தகை வார உரிமை வழங்கப்பட்டுச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
இதன் மூலம், நிலமற்ற விவசாயிகள் குத்தகை உரிமை பெற்று 50 முதல் 100 ஆண்டுகளுக்கு மேலாகச் சாகுபடி செய்துவருகிறார்கள். இந்நிலையில், இந்து அறநிலையத் துறை குத்தகைப் பதிவை ரத்துசெய்திருப்பதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குத்தகைப் பதிவு ரத்துசெய்யப்பட்ட விவரம்கூடப் பல விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பதுதான் இன்னும் கொடுமை.