

பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை அரசாங்கத்தால் முழுமையாகவோ அல்லது பெரும்பான்மையான (51 சதவீதத்துக்கு அதிகமாக) பங்குடனோ நிர்வகிக்கப்படும் வணிக நிறுவனங்கள். மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள், மாநிலப் பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும். தமிழகத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான 68 பொதுத் துறை நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை தவிர, மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் அலகுகளாக இயங்கி வருபவையும் உள்ளன. இவை அனைத்தும் கம்பெனி சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே. இவற்றில் பெரும்பான்மையானவை ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன.