

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கும், வல்லரசாகக் கருதப்படும் நாட்டின் அதிபருக்கும் இடையேயான நட்பு திடீர் மோதலாகி ஒருவழியாகச் சமாதான நிலையை அடைந்துவிட்டது. இருவருக்கும் இடையே விரோதம் ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் டெஸ்லா / ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்க்குக்கும் இடையே உண்டான நட்பு வெகுவேகமாக வளர்ந்த ஒன்று. குறிப்பாக, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரானார். அவரது கட்சிக்குத் தேர்தல் நிதியை வாரி வழங்கினார். 250 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 2,156 கோடி ரூபாய்!)