

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது. சில 1,000 பேர் மட்டுமே குழுமியிருக்கும் அளவுக்கு இடம்கொண்ட அந்த மைதானத்தில், திடீரென லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்வதற்காக ஏராளமான மக்கள் ஒரே நடைமேடையில் கூடியதில் கிட்டத்தட்ட 18 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள். கடந்த ஜனவரியில் அதே கும்பமேளாவில் 30க்கும் மேற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்கள்.