

மூளையின் உள் அமைப்புகளையும் அதன் மொழித் திறனையும் புரிந்துகொள்ள, இவ்வளவு சுவாரசியமான ஒரு காட்சி அனுபவத்தில் மூழ்குவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இந்த இயற்கை அற்புதத்தைச் செயற்கை அதிசயமாக மாற்றிய கதையைத்தான் இனி செய்மெய்யிடம் கேட்க வேண்டும்.
“கணிப்பொறித் துறையிலிருந்து பல புதிர்களை மூளைதான் விடுவித்தது என்றாயே செய்மெய், அதெல்லாம் எப்படி நடந்தது?” “அந்தப் புதிருக்கான விடை நியூரான்களிடம்தான் இருந்தது கவின். இந்த நியூரான்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் வேலையைச் செய்தவர்கள் என்னவோ நரம்பியல் அறிவியல் நிபுணர்கள்தான்.