

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாடம் தன்னை அயராத மறுநிகழ்வாகவே வெளிப்படுத்திக்கொள்ளும். தினசரி சூரியன் உதிக்கும், மறையும். கோடை வரும், பின்னர் மழை வரும். இப்படியான சுழற்சிகளால்தான் அன்றாடம் நிறைந்துள்ளது. அதேவேளை, மானுட அனுபவத்தில் ஒவ்வொரு நாளுக்கும் வித்தியாசங்கள் இருக்கும். ஒரு நாள் காலை வெப்பமாக இருக்கும்; இன்னொரு நாள் சற்றே குளிர்ச்சியாக இருக்கும்.
சமூக உறவுகளிலும் மனநிலைகள் மாறிக்கொண்டே