

அஞ்சலி: ஓவியர் மு.சேனாதிபதி
சென்னைக்கு அருகிலுள்ள சோழ மணடலம் ஓவியக் கிராமத்தின் மூத்த ஓவியர்களில் ஒருவரான மு.சேனாதிபதி காலமாகிவிட்டார். மதச் சடங்குகள், தெய்வ உருவங்கள் இவை எல்லாம் இவரது ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக கலை விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள். நாட்டார் தன்மைகளும் இவரது ஓவியத்தின் ஓர் அம்சம். சென்னை ஓவிய இயக்க ஓவியர்களில் ஒருவரான இவர், இந்தியாவில் பல பகுதிகளில் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளார். பிரிட்டிஷ் கவுன்சில் மானியத்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ஓவியங்களைக் கண்டறிந்துள்ளார். இந்தியாவைத் தவிர, போலந்து, ஜெர்மனி, மலேசியா, ஹாலந்து, மொராக்கோ ஆகிய நாடுகளிலும் சேனாதிபதி கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.