

இன்றைக்குப் பெரும்பாலோர் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்குள் வந்துவிட்டனர். அவர்களிடையே, தாம் வலைத்தளத்தின் வழியாகச் செய்தியாவதிலோ / காட்சியாவதிலோ விருப்பம் அதிகரித்திருக்கிறது. அதேபோலத் தமக்குப் பிடித்த செய்தி / காட்சிகளைப் பெறுவதற்கும் அவர்கள் மெனக்கெடுகின்றனர்.
அதாவது, வலைத்தளப் பயனர்களிடையே சமூகத்தின் மீதான தமது பார்வையும் தம் மீதான சமூகத்தின் பார்வையும் அறுபடல் இல்லாமல் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற மனநிலை உருவாகியிருக்கிறது.