

இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சமத்துவமின்மையின் புதிய குறியீடாக, அதிகரித்துவரும் பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கையைக் கூறலாம். சர்வதேசப் பொருளாதாரத் தளத்தில் பெரும் செல்வந்தர்கள் ஊடுருவிப் படர்ந்து பரவி இருக்கிறார்கள்.
சிறு எண்ணிக்கையிலான பெரும் செல்வந்தர்கள்தான் உலகப் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிடுகிறார்கள்; இயக்குகிறார்கள். இத்தகைய பொருளாதார வளர்ச்சிப் போக்கினை ‘புளுடோனமி’ (Plutonomy) என அரசியல் பொருளாதார அறிஞர்கள் கூறுவர்.