

மாபெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறது வியட்நாம். அது வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள் ஆனதற்கான கொண்டாட்டம். இதற்குப் பல காரணங்கள். 1975 ஏப்ரல் 30ஆம் தேதிதான் ஹோ சி மின் நகரம் (அதன் அப்போதைய பெயர் சைகான்) வட வியட்நாமின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதன் தொடர்ச்சியாகத் தென் வியட்நாம், வட வியட்நாம் ஆகிய இரண்டும் இணைந்து ஒரே குடியரசாக ஆனது. இதைத்தான் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30ஆம் தேதி இணைப்பு நாள் அல்லது விடுதலை நாள் என்கிற பெயரில் கொண்டாடி வருகிறார்கள். இப்போது பொன் விழா ஆண்டு என்பதால் கொண்டாட்டம் களைகட்டுகிறது.