

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப் பதக்கம்’ தொடங்கி - காவல் துறை அதிகாரியை மையமாகக் கொண்டு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் என அடுத்தடுத்த தலைமுறை நாயகர்கள் நடித்த பல படங்கள் அத்துறைக்குப் பெருமை சேர்ப்பவை.
கடமை தவறாத காவல் துறை அதிகாரிகளாக - எத்தகைய மேலிட இடையூறுகளுக்கும் வளைந்து கொடுக்காமல், எத்தகைய தியாகத்துக்கும் தயாராக இருந்து, உறவுகளையும் உடைமைகளையும் இழந்தாலும் நீதியை நிலைநாட்டப் பாடுபடும் நாயகர்களின் தொழில் பக்தியை இத்தகைய படங்களில் கண்டு சிலிர்த்திருக்கிறோம்.