நாம் வாசித்தால்தானே குழந்தைகளும் வாசிப்பார்கள்?! - கல்விச் செயல்பாட்டாளர் சாலை செல்வம்

நாம் வாசித்தால்தானே குழந்தைகளும் வாசிப்பார்கள்?! - கல்விச் செயல்பாட்டாளர் சாலை செல்வம்
Updated on
3 min read

எழுத்தாளரும் கல்வியாளருமான சாலை செல்வம், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குழந்தைகளின் கல்வி சார்ந்து மதுரையில் இயங்கும் கூழாங்கல் கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநர் - செயலராக இருந்திருக்கிறார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் புதுச்சேரி பிரிவில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர். மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் அவருடனான நேர்காணல்:

தொடக்கத்தில் பெண்கள் சார்ந்து செயல்பட்டுவந்த நீங்கள் சிறார் இலக்கியம், வாசிப்பு சார்ந்து செயல்படத் தொடங்கியது எப்போது? - பெண்களுடன் இணைந்து வேலை செய்வது என்பது குழந்தை​களையும் உள்ளடக்​கியது. பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்குக் குழந்தைகளின் மேம்பாடும் அவசியம் என்று தோன்றியபோது கல்வி சார்ந்து பணியாற்றுவது இயல்பாக நடந்தது. அந்தக் காலத்தில் நாம் பயின்​றபோது கிடைத்​ததோடு ஒப்பிட்​ட​தில், வாசிப்பு குறைவாக இருப்பது தெரிந்தது. அந்தக் காலத்தில் நான் படித்த ‘பகல் கனவு’, ‘டோட்​டோ​சான்’, ரஷ்ய இலக்கியமான ‘குழந்தைகள் வாழ்க’ (ஷ. அமோனஷ்​விலி) போன்ற புத்தகங்கள், குழந்தை​களிடம் பெரிய​வர்கள் எப்படி நடந்து​கொள்ள வேண்டும், கல்வித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in