

காலை நடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் வள்ளுவர். அமைச்சர் வந்து வணங்கினார். “அரசர் உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். “வரட்டுமே, அவரும் என்னுடன் சேர்ந்து நடக்கலாமே?!” என்றார் வள்ளுவர். அரசர் தேரைவிட்டு இறங்கினார்.
கடற்கரை ஓரமாக இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். அரசர் பேச ஆரம்பித்தார்: “போர் ஒன்று மூளவிருக்கிறது, உங்கள் ஆலோசனை தேவை. “போரைத் தவிர்க்க முடியாதா?” என்றார் வள்ளுவர். “முடியாது. அது காலத்தின் கட்டாயம்.” “நான் என்ன செய்ய வேண்டும்?” “உங்கள் அறிவுரை வேண்டும்.” “முழு விவரங்கள் சொன்னால் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.” “எதிரி வலிமையானவர்.