வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!

வசந்தத்தைக் கொன்றுவிட்டோம்!
Updated on
3 min read

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம் கண் முன்னால், உலகின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் தீவிரமாக அரங்கேறத் தொடங்கிவிட்டது. ஆனால், இப்போதும் நமது அலட்சியமும் அக்கறையின்மையும் தொடரவே செய்கின்றன.

இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு. மேற்கத்திய நாடுகளைப் போலக் கதகதப்​புக்காக ஏங்குபவர்கள் அல்ல நாம். வளத்தை வாரித்​தரும் மழைக் காலத்​துக்​காக​வும், கோடையில் இதமான வெப்பநிலைக்​காகவும் ஏங்குவதே நம் வழக்கம். ஹோலி, வைசாகி, சித்திரைத் திருவிழா, போஹாக் பிஹு போன்று நாட்டின் ஒவ்வொரு பகுதி​யிலும் நடைபெறும் விழாக்கள் வசந்தத்​தின்​-இளவேனிலின் வருகையை வரவேற்றுக் கொண்டாடுபவை. ஆனால் ஒன்று தெரியுமா, வசந்தம் நம்மிடம் இருந்து அதிவேக​மாகக் காணாமல் போய்க்​கொண்​டிருக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in