

2023 மே 3இல் மணிப்பூரைச் சூறையாடத் தொடங்கிய இனக்குழு மோதலில், 46 வயதான ஷரத் லேய்ஷங்தம் சுராசாந்த்பூரில் உள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறினார். தரைமட்டமாக்கப்பட்டுவிட்ட தனது வீட்டிலிருந்து பல கி.மீ. தொலைவில் உள்ள விஷ்ணுபூரில் ஒரு நிவாரண முகாமில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் லேய்ஷங்தம், சாலை ஓரத்தில் கரும்புச் சாறு விற்றுப் பிழைக்கிறார்.
கண்ணீரும் கரும்புச் சாறும்: வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், குக்கி ஸோ பழங்குடி மக்களுக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் இடையே 2023இல் வெடித்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 13இல் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர், அண்மையில் அங்கு சென்றிருந்த நான், லேய்ஷங்தமைச் சந்தித்தேன்.