கூலிப்படையில் இருந்து மாணவர்களை மீட்போம்!

கூலிப்படையில் இருந்து மாணவர்களை மீட்போம்!

Published on

இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்கிறவர் களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நகை வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொள்ளை, கொலை செய்கிறவர்களில் பள்ளி-கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அல்லது அந்த வயது உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது சமீபகாலமாக மிகுந்த கவலையூட்டும் போக்காக மாறிவருவதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.

“பள்ளி இறுதித் தேர்வு முடிந்து மாணவர்கள் அமைதி​யாகப் பள்ளி வளாகத்தை​விட்டுச் செல்லக் காவல் நிலை​யங்கள் மூலமாகப் பாது​காப்பு பெற்றுக்​கொள்​ளுங்​கள்” என முதன்​மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்​களுக்கு எழுதுகிறார். “சிறு​வர்​களுக்​குப் பணம் கொடுத்து மனநிலையை மாற்றிக் குற்​றங்​களில் ஈடுபடச் செய்​கிறவர்​களிடம் கவனமாக இருங்​கள்” எனத் தமிழக சட்டப்​பேர​வைத் தலைவர் குறிப்​பிடு​கிறார். அதாவது, பள்ளிக்​கூடத்​தி லேயே மாணவர்கள் வன்முறை​யில் இறங்கு​வார்கள் என்றும் கூலிப்​படை​யில் மாணவர்களைச் சேர்க்​கிறார்கள் கவனமாக இருங்கள் என்றும் அரசாங்கம் கவலை​யுடன் அறிவுறுத்து​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in