

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
உயிரினங்களின் இன்றியமையாத பண்பு இனப்பெருக்கம். ஒற்றைச் செல் நுண்ணுயிரிகள் தங்களை இரட்டித்துக்கொண்டு பெருகும். பரிமாண வளர்ச்சியடைந்த உயிரிகள் இனப்பெருக்கம் செய்வது, பலவிதமான உயிரியல் நடவடிக்கைகளாக மாறுகிறது.