

பொன்முகலி, தமிழின் விசேஷமான கவிஞர். நவீனத்தின் அசாதாரணமும் நெருப்பிலிட்ட வெள்ளியைப் போன்ற பளபளப்பும் கொண்டவை இவரது கவிதைகள். ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது' (காலச்சுவடு பதிப்பகம்), தாழம்பூ (தமிழினி பதிப்பகம்) ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளும் ‘கடவுளுக்குப் பின்’ (காலச்சுவடு) சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
கவிதைகளில்தானே தொடங்கினீர்கள்?