

ரீல்ஸ் எனப்படும் காணொளிக் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது... ஓய்வு நேரத்தையெல்லாம் ரீல்ஸே அபகரிக்கிறது என்கிற குரல்கள் அன்றாடத்தின் சாதாரண உரையாடல்களில்கூட ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பெற்றோர் சொல்லி வருத்தப்படும் விஷயங்களின் பட்டியலில் ரீல்ஸ் உச்சத்தில் இருக்கிறது.
ரீல்ஸ் உள்ளிட்டவற்றுக்காகச் சமூக வலைத்தளங்களில் அளவில்லாமல் நேரத்தைச் செலவிடுவதை ஒரு சமூகச் சிக்கலாகவும் நோயாகவும் (Mobile Addiction) கருதுகிற நிலைக்குச் சமூகம் வந்துவிட்டிருக்கிறது. உண்மையிலேயே ரீல்ஸ் சிக்கலுக்கு உரியதுதானா?