

தற்போது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ‘மொழி அரசியல்’ தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டி விரிவடையுமா என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இந்தித் திணிப்பு முயற்சி எனத் தமிழ்நாடு அரசு முன்வைத்து வரும் முழக்கங்களையும் தாண்டி, மொழி அரசியலில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
மொழியியல் ஆய்வு: உலகில் ஆப்ரிக்காவுக்கு அடுத்ததாக அதிகமான மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா. அதிகமான பழங்குடியினர் வாழும் நாடும்கூட. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 10% பேர் பழங்குடிகள். ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றபோது, முதன்முறையாக ‘இந்திய மொழியியல் ஆய்வு’ 1894 முதல் 1928 வரையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.