

நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சிஈஓ வேர்ல்டு’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் தர வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மருத்துவக் கல்வியின் தரம், மாணவர் சேர்க்கைத் தகுதிகள், சிறப்புத் துறைகள், உலகளாவிய நன்மதிப்பு, மருத்துவ ஆராய்ச்சி நடவடிக்கைகள், மாணவர்களின் மனத் திருப்தி, ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 99.06 மதிப்பெண்கள் பெற்று அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.