உடல் என்​கிற நிலை​யாமை | தொன்மம் தொட்ட கதைகள் - 27

உடல் என்​கிற நிலை​யாமை | தொன்மம் தொட்ட கதைகள் - 27
Updated on
2 min read

கிருஷ்ணருக்​கும் ஜாம்​பவ​திக்​கும் பிறந்​தவன் சாம்​பன். இவன் சிறந்த உடல் நலமும் அழகும் அமையப் பெற்றவன். துரியோதனனுடைய மகளாகிய இலக்​கணையை இவன் மணம் புரிந்​திருந்​தான். ஒரு​நாள் மாலை​யில் சாம்​பன் நண்​பர்​களு​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தான். நண்​பர்​கள் இவனுக்​குக் கர்ப்​பவதி வேடம் புனைந்தனர். அங்கு விஷ்​வாமித்​திரர், கன்​வர், நாரதர் ஆகிய மூன்று முனிவர்​களும் தவம் செய்​து​கொண்​டிருந்​தனர். அவர்​களிடம் சாம்​பனைக் கொண்​டு​சென்று நிறுத்​தினர். ‘இந்​தப் பெண்​ணுக்கு ஆண்​குழந்தை பிறக்​கு​மா? பெண்​குழந்தை பிறக்​கு​மா?’ என்று நண்​பர்​கள் கேட்​டனர். உண்​மையை உணர்ந்த முனிவர்​கள், ‘உங்​கள் குலத்தை அழிப்​ப​தற்கு ஓர் இரும்பு உலக்கை பிறக்​கும்’ என்று கூறினர். அவ்​வாறே சாம்​பனுக்கு இரும்பு உலக்கை பிறந்​தது. சாபத்​தின் தீவிரத்தை உணர்ந்​து​கொண்ட யாதவர்​கள், அந்த உலக்​கை​யைத் தூள் தூளாக்​கிக் கடலில் கரைத்​தனர். ஆனாலும் அதிலிருந்து தோன்​றிய கோரைப் புற்​கள் அவர்​கள் குல அழி​வுக்​குக் காரண​மானது. இது​தான் வியாச பாரதத்​தின் மௌசல பரு​வம் கூறும் சாம்​பனின் கதை.

சாம்​பனின் பிற்​பகு​திக் கதையை வடமொழிப் புராணங்​கள் வேறு​மா​திரி​யாகச் சொல்​லி​யுள்​ளன. அதிவீர​ராம பாண்​டியர் வடமொழி நூலான சங்​கரசங்​கிதையைத் தழு​வி, ‘காசி காண்​டம்’ என்​றொரு நூல் எழு​தி​யுள்​ளார். எழுத்​தாளர் இமை​யம் ‘சாம்​பன் கதை’ என்​றொரு சிறுகதை எழு​தி​யுள்​ளார். ஒடுக்​கப்​பட்ட மனிதர்​களின் யதார்த்த வாழ்க்​கை​யின்​மீது நடத்​தப்​படும் இடை​யீடு​கள்​தாம் இமை​யத்​தின் புனை​வு​கள். எளிய மக்​களின் மொழியையே தன் புனைவு மொழி​யாக​வும் கொண்​டிருக்​கிறார். தற்​போது தொன்​மம் சார்ந்த கூறுகளை​யும் தம் புனை​வு​களில் பயன்​படுத்​தி, மறு​வாசிப்​புச் செய்​து​வரு​கிறார். இதனை இமை​யத்​தின் அடுத்​தகட்ட நகர்​வாக​வும் கருதலாம். சாம்​பன், யாதவர் குலத்தை அழிக்​கப் பிறந்​தவன் என்ற அடை​யாளத்தை இவரது சிறுகதை உடைக்கிறது; அவனது வரலாற்றை விரிக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in