

‘டாக்டர் சுப்ரஜா எதிர் அரசு’ வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுளா எழுதிய ஒரு தீர்ப்பை அண்மையில் வாசித்தேன். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தற்போதுள்ள சட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது ஆகியவை தொடர்பான வழக்கு அது.
இப்பிரச்சினையை விவாதிக்கும்போது நீதியரசர் ஒரு சுவையான, முக்கியமான கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். அது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பிரச்சினையைப் பார்ப்பது அல்லது ஒரு அறிவார்ந்த பெண்ணின் அளவுகோலைப் பயன்படுத்துவதாக உள்ளது.