

தமிழ்நாட்டில், கடந்த 2024 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது.
தற்போது பயிர்ச் சேதங்கள் கணக்கிடப்பட்டு, இப்புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,18,783 விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.498.8 கோடி வழங்கப்படும் என்கிற அரசாணையைத் தமிழக அரசு பிப்ரவரி 19, 2025 அன்று வெளியிட்டுள்ளது. பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறிவருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?