

புகழ்பெற்ற, விருதுகள் பல பெற்ற எழுத்தாளர் ஒருவரின் பேச்சை அண்மையில் கேட்க நேர்ந்தது. “பல யானைகள் வந்தது” என்று பேசிக்கொண்டிருந்தார். கதையின் சுவையில் கிறங்கிக்கிடந்தவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.
அத்தோடு நிற்கவில்லை கதை. “சென்றுப் பார்த்தான்”, “என்றுச் சொன்னார்” என்றும் மும்முரமாக முழங்கிக்கொண்டிருந்தார். அவர் பேசியது உலக இலக்கியத்தில் ஓர் அற்புதமான கதையைக் குறித்து. கதையை விட மனதில்லை என்றாலும், இலக்கணக் கொலையைச் சகிக்க இயலாமல் வெளியேறிவிட்டேன்.