

இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் என்பது இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில், 1986இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஏனைய நாடுகளில் அந்த நாட்டினுடைய தலைசிறந்த அறிஞர் அல்லது விஞ்ஞானி ஒருவருடைய பிறந்த நாளைத் தேசிய அறிவியல் நாளாக அறிவித்து, அதை அனுசரிக்கிறார்கள்.
ஆனால், நம் நாட்டில் அறிவியல் நாள் என்பது உண்மையான அறிவியல் கொண்டாட்டமாகும்.
சர் சி.வி.ராமன் 1928 பிப்ரவரி 28 அன்று ‘ராமன் விளைவு’ என்கிற தன் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930இல் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாளைத்தான் இந்தியா கொண்டாடுகிறது. இந்தப் பெருமை ஒருபுறம் இருக்கட்டும்... ராமன் விளைவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?