

ஒவ்வொரு சூரிய உதயத்தின்போதும் அல்லது வானம் கறுத்த பொழுதுகளிலும் அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதோ மனித வாழ்வு முடியப்போகிறது என்று அச்சுறுத்தல் நிலவிய கோவிட் நோய்த்தொற்று பரவிய காலத்திலும் வெட்டவெளிகளில் அவர்கள் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.
2020 மே மாதத்தின் 25 நாள்களில் 91 லட்சம் தொழிலாளர்கள் ஆரல் மீன் புரளும் வயல்கள் நிறைந்த சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பினர். 1,000 ஆண்டுகளுக்கு முன் குஷானர்களின் சிற்பங்களில் பதிவுசெய்யப்பட்ட ஏரும் உழவனும் இப்போதும் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் உழைப்பும் விளைச்சலும்தான் இப்போது சிறுமையையும் அவமானத்தையும் சந்திக்கின்றன. ஏன் இந்த நிலை?