

ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் கண்டறிந்தனர். இதற்கான ஆய்வை ஐரோப்பிய நாடுகளின் காலனிகளில் அவர்கள் நடத்தினர்.
அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகள் (inclusive Socio-political, economic institutions), ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. சுரண்டலை ஊக்குவிக்கும் அமைப்புகள் (Extractive Institutions) நாட்டின் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக அதிகரிக்கின்றன. சமூக, அரசியல் மாற்றமின்மைக் கொள்கை சுரண்டலை ஊக்கப்படுத்துகிறது என்பதை ஆய்வு மூலம் அவர்கள் உறுதிப்படுத்தினர்.