

சமையல் உப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை உலக சுகாதார நிறுவனம் மறுபடியும் கையில் எடுத்திருக்கிறது. 1950களில் இந்தியர்களிடம் அயோடின் குறைபாடு அதிகம் காணப்பட்டது. ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre), ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது அதிகம்.
குறிப்பாக, குழந்தைகள் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக் குறைபாடுகளால் (Cretinism) பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 1962இல் இந்தியாவில் அயோடின் செறிவூட்டப்பட்ட சமையல் உப்பு (Iodised salt) அறிமுகம் செய்யப்பட்டது.