சிறப்புக் கட்டுரைகள்
சிம்பொனிக்காக என் அடையாளங்களைத் துறந்தேன் | இளையராஜா பேட்டி
‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இளையராஜாவுடன் நடத்திய நேர்காணலிலிருந்து...
சிம்பொனி படைத்திருக்கும் முதல் இந்தியர், அநேகமாக முதல் ஆசிய இசைக் கலைஞர் நீங்கள்தான். சிம்பொனி இயற்றுவது என எப்போது முடிவெடுத்தீர்கள்?
