

படிநிலைச் சாதிய சமூகக் கட்டமைப்பின் சிக்கல்களில் பழையன நீடிப்பதும் புதியன உருவாவதும் அமைதியற்ற சூழல் நீடித்திருக்க வழிவகுக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டத்திலும் அதன் பின்னரும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள், சமூகத்தில் ஒவ்வொரு நபரும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளன.
இருப்பினும், சட்ட உரிமைகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து நீடிக்கிறது. தனி நபர்களோ, சமூகங்களோ, கும்பல்களோ ஒருவரது சுயமரியாதையை வெவ்வேறு வடிவங்களில் அத்துமீறுகிறபோது அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன.