

சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23 அன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. சென்னை அம்பத்தூரில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மூவர், அங்கு பணியாற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு அலுவலர் தங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக விசாகா குழுவில் புகார் அளித்துள்ளனர்.
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை - தீர்வு) சட்டம், 2013இன்படி பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காகச் சில ஏற்பாடுகளைச் செய்வது கட்டாயம். விசாகா குழுப் பரிந்துரைகளின்படியான ‘உள் விசாரணைக் குழு’ அமைத்தல் அவற்றில் ஒன்று.